Wednesday, January 18, 2012

Currency Calculator


Amount:


From:


To:



Currency conversion powered by coinmill.com

Friday, September 23, 2011

ஆலம்பறை கோட்டை

ஆலம்பறை கோட்டை

ஆலம்பறை கோட்டை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கடப்பாக்கம் என்ற கிராமத்திற்கு(சிறிய நகரம் என்றும் கூறலாம்) சிறு வேலையாக நண்பர்களுடன் செல்ல வேண்டி நேர்ந்தபோது ஆலம்பறை கோட்டைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கிருந்த இடிந்த சிதிலமான கோட்டையை பார்க்க கடப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆட்டோ ஒன்றினை அமர்த்திகொண்டு நண்பர்கள் அனைவரும் சென்றோம். செல்லும் வழி குறுகலான ஒற்றையடி பாதை போன்ற தார் ரோடுதான் என்றாலும் மிக சிறிய சாலையாக இருந்தது. 5 நிமிடங்களில் குறிப்பிட்ட இடத்தினை சென்று அடைந்துவிட்டோம். மீனவ சமுதாய மக்கள் தங்கள் வாழ்வாதாரமான கடலை நம்பி சுற்றுபுரத்தில் வாழ்ந்து வருகின்றனர். ஒரு காலத்தில் மன்னர்கள் வாழ்ந்த கோட்டைக்கருகில் வாழ்கிறோம் என்ற எண்ணம் அவர்களிடம் இருக்கிறதா இல்லையா என்பதை ஊகிக்க முடியாத நிலையில் சற்றே ஆச்சரியத்துடன் ஆட்டோவிலிருந்து இறங்கினோம்.

இறங்கியவுடன் ஒரு மீனவ நண்பர் அருகில் வந்து அருகிலிருக்கும் தீவிற்கு படகில் அழைத்து செல்வதாக கூறினார். கோட்டையை பார்த்தபிறகு செல்லலாம் என தவிர்த்துவிட்டோம். தமிழக அரசு மற்றும் தொல்லியல் துறையால் நிறுவப்பட்ட அதே சமயம் கேட்பாரற்று கிடக்கும் கல்வெட்டு மற்றும் தகவல் பலகைகளை படித்து பார்த்து கோட்டை பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டோம். ஆச்சரியமாக (நான் மட்டும்) கோட்டை வளாகத்தில் நுழைய நேர்ந்த போது இருந்த எதிர்பார்ப்பு சற்றென வடிந்து விட்டது. நான்கைந்து குட்டி சுவர்கள் மட்டுமே காண கிடைத்தது. அதுவும் எந்தவித பராமரிப்பின்றி கிடந்தது.

மன்னர்கள் வாழ்ந்த வாழ்க்கையை பற்றி பேசாது அவர்கள் பெருமை மற்றும் கோட்டையின் வரலாற்றினை பற்றி விவாதிக்காமல் இந்த இடத்தில எடுத்த திரைப்படங்கள் அவற்றின் படப்பிடிப்பு பற்றிய விவாதங்களே அதிகமாக இருந்தன. "அதோ அந்த இடத்தில் சூர்யா நடந்தார்!" "இதோ இந்த இடத்தில் விக்ரம் உட்கார்ந்தார்" என்ற உரையாடல்களே புருவ உயர்த்தலுக்கு காரணமாய் அமைந்தன. திரைப்படங்கள் எந்த அளவிற்கு தற்காலத்தில் கோலோச்சுகின்றன என்பதை நன்கு உணர முடிந்தது.

கோட்டை வரலாறு

இக்கோட்டை கி.பி. 17ஆம் நூற்றாண்டில் மொகலாய அரசரால் கட்டப்பட்டதாக தெரிகிறது. கி.பி 1735ல் இது நவாப் தோஸ்து அலிகானின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. பிரெஞ்ச் தளபதியான டூப்ளே தனக்களித்த உதவிக்கு பரிகாரமாக தக்காண சூபேதார் முஸாபர்ஜங் பிரெஞ்ச்காரருக்கு கி.பி.1750ல் அன்பளிப்பாக கொடுத்துள்ளார். கி.பு 1760ல் ஆங்கிலேயர்களால் இக்கோட்டை தகர்க்கபட்டுள்ளது. இது செங்கலால் கட்டப்பட்டுள்ளது. (உதவி-தமிழகதொல்லியல் துறை கல்வெட்டு)

புகைப்படங்கள்